உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!
உள்ளூர் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு! மத்திய அரசுக்கு கடிதம்!!
தமிழகத்தில் நாள்தோறும் கொரானா பாதிப்பு குறையாமல் உயர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக வெளி மாநில போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூர் விமான சேவையை மத்திய அரசு நேற்று முதல் தொடங்கியது. முதலில் விமான சேவை 31ம் தேதி வரை தொடங்க வேண்டாம் என்ற தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில், இங்கு நிலவும் சூழ்நிலைப்படி சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும...
