தமிழக எம்.எல்.ஏ.க்களில் 10 சதவீதம்பேர் கொரானாவால் பாதிப்பு!
தமிழக எம்.எல்.ஏ.க்களில் 27 பேருக்கு கொரானா வைரஸ் இதில் 3 அமைச்சர்கள் அடஙகும்!
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடு பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 27 உறுப்பினர்கள் கொரானா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மொத்தமுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடாகும். இதில் மூன்று அமைச்சர்களும் அடங்குவார்கள். இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தொகுதியில் மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்.அதனால் மக்களை சந்திக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றவேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துவருகின்றனர்.
கொரானா பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் அதிமுகவையும், 11 பேர் திமுகவையும்...
