5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒருமாத மளிகை பொருள்களை வழங்கிய பிரபல தயாரிப்பாளர்!
*5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்*
ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.
இவர் திருவண்ணாமலை பகுதியிலுள்ள 5000 ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வேலை இழந்து தினக்கூலி தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான குடும்பங்கள் நாடு முழுவதும் வறுமையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பலர் ஒருவேளை உணவு இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ...

