வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: தர்பூசணி

தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி! ஜார்கண்டை சேர்ந்த விவசாயி ரஞ்சன் குமார் மாடோ (வயது25). பட்டதாரியான இவர், விரும்பியபடி வேலை அமையாததால், 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இவரது பண்ணைக்கு அருகில் இருந்து ராணுவ அதிகாரிகள், வீரர்கள் வந்து விளைபொருட்களை வாங்கி செல்வது உண்டு. ரஞ்சன் தற்போது 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தேசத்திற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு அந்த பழங்களை விவசாயி ரஞ்சன் இலவசமாக வழங்கினார். அவர் குறிப்பிட்ட அளவு பழங்களை ராணுவத்திற்கு இலவசமாக வழங்க, மீதி பழங்களை ராணுவ பிரிவினர், சந்தை விலையில் விவசாயியிடம் இருந்து விலைக்கு வாங்கிக்கொண்டனர்....