தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!
தயாரிப்பாளர் சங்க தலைவராக மீண்டும் வர தேர்தலில் களம் இறங்குகிறார் தாணு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அரசின் சார்பில் ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் நிர்வாக பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதோடு அவருக்கு உதவியாக தமிழக அரசால் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அதில் மூத்த பல தயாரிப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. டி.சிவா தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் திடீரென கொரானா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டு கேட்கும் பணிகள் அனைத்தும் முடங்கி இருந்தது.
இந்த சூழ...
