ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம், உயிரிழந்தால் 1கோடி வழங்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்!
கொரானா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மேலும் காணொளி காட்சி மூலம் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்தது.
இதையடுத்து கொரானா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கொரானா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றன...
