வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார்.
ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர்.
இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...

