திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: திருப்பூர்

திருப்பூரில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி !

திருப்பூரில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது.அப்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். இதில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உர...
விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தேர்தல்!

விறுவிறுப்பாக நடந்த தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தேர்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை உறுப்பினராக கொண்டு இயங்கி வருகிறது தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா). இந்த சங்கத்தின் 2022- 2025 க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். வைகிங் ஈஸ்வரன் அணி, பிரியா ஒசைரிஸ் பாலசந்தரை துணை தலைவராக நிறுத்தி மாற்றத்திற்கான அணி என இரண்டு அணியாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிற பதவிகளுக்கு மொத்தம் 52 பேர் போட்டியிட்டனர். திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சைமா சங்க வளாகத்தில் இன்று காலை 9மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதியம் 2 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவி என மொத்தம் 5 ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ...
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில...
திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், காலா வதியான உணவு பொருள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கி எச்சரித்தனர். பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய...
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

HOME SLIDER, NEWS, politics
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்! திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் நேற்று மதியம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ரோந்து செல்ல பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தை டிரைவரான போலீஸ்காரர் ராஜகுரு, அங்கு நிறுத்திவைத்திருந்தார். பின்னர் சாவியை வாகனத்தில் வைத்து விட்டு ராஜகுரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்....