குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!
திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் நேற்று மதியம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ரோந்து செல்ல பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தை டிரைவரான போலீஸ்காரர் ராஜகுரு, அங்கு நிறுத்திவைத்திருந்தார்.
பின்னர் சாவியை வாகனத்தில் வைத்து விட்டு ராஜகுரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்....
