படித்தவர்கள் யார்? அன்புமணிக்கு கிளாஸ் எடுத்த திருமா!
அரக்கோணத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகளையொட்டிய விவாதங்களில் ஒன்றாக, திருமாவளவன் மீது படித்த இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார் பாமக இளைரணித்தலைவர் அன்புமணி. அதற்கு எதிர்வினையாக, என் படிப்பு இது, நான் திருமாவளவனோடு நிற்கிறேன் என்று ஏராளமான பட்டதாரிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டார்கள்.
இந்நிலையில்,நேற்று (ஏப்ரல் 11) நடந்த நேரலை நிகழ்வொன்றில் திருமாவளவன் ஆற்றிய உரை…..
திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு கல்வியை நுகர வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக...
