கொரானா நேரத்தில் அவசர சட்டத்தால் கூட்டுறவு வங்கிகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு திருமா கண்டனம்
கூட்டுறவு வங்கிகளை
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்
அவசர சட்டம்:
கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா?
மத்திய அரசுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வங்கிகளை முறைப்படுத்தல் ( திருத்தச் சட்ட) மசோதா 2020 எனும் சட்ட மசோதா மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா நெருக்கடியினால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்த...

