சனிக்கிழமை, ஆகஸ்ட் 8
Shadow

Tag: திருமா கண்டனம்

சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை:  ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிறுமி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக்கொலை: ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் கொடூரத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். சிறுமியின் தந்தை ஜெயபாலுடன் முன்னதாக ஏற்பட்ட தகராறையொட்டி, அந்த இருவரின்மீது அவர் காவல்துறையில் புகார்செய்தார் என்பதனால், அவர்கள் இருவரும் ஜெயபால் மீதுள்ள பழிவாங்கும் வெறியி...
மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? – அரசுக்கு திருமா கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுக்கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? அதிமுக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! ~~~~~~~~~~~~~~~~~~ சென்னை உயர்நீதிமன்றம் மதுக் கடைகளை மே17 ஆம் தேதிவரை மூடுமாறு நேற்று உத்தரவிட்டதால் தமிழக மக்கள் சற்றே ஆறுதலடைந்தனர். இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனாவைப் பரப்புவதற்கு அதிமுக அரசு காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது கொரோனா அதிகமானால் அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார்களோ என சந்தேகம் வலுக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுக் கடைகளைத் திறப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என உச்சநீதிமன்ற மனுவில் கூறியிருக்கும் தமிழக அரசு, மாநில அதிகாரங்கள...