பிரதமரின் 20 லட்சம் கோடி வெற்று உரைக்கு நிதியமைச்சர் விளக்கவுரை…- விடுதலை சிறுத்தைகள் கருத்து
*வெற்று உரைக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்!*
*நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து!*
பிரதமர் தனது உரையில் 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் திட்டங்களை அறிவிப்பதாகவும் அதன் விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார். அதனால் நாடே நிதியமைச்சரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்நிலையில் சிறு குறு தொழில்கள் தொடர்பான அறிவிப்புகளை இன்று நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். பிற அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புகள் எவையும் உடனடியாக மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடியவையாக இல்லை. பிரதமரின் வழக்கமான வெற்று உரைக்கு விளக்க உரையாக அமைந்துள்ளதே தவிர வேறேதும் இல்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறு குறு தொழிற்சாலைகளில் வகைப்பாடு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிற...

