வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: துருவங்கள் பதினாறு

பிரபல பாலிவுட் நடிகர் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்!

பிரபல பாலிவுட் நடிகர் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல பாலிவுட் நடிகர் ‘துருவங்கள் பதினாறு’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்! இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘துருவங்கள் பதினாறு’. இந்த படத்தில் ரகுமான், யாஷிகா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்திக் நரேன் நரகாசூரன், மாஃபியா ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘டி43’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் ரகுமான் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி நடிகை பரினிதி சோப்ராவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்...