வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: நகுல்

நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை!

நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிகர், பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கைவசம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் எரியும் கண்ணாடி படமும், ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா படமும் உள்ளது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள...