சென்னையில் மாஸ்க் அணியாமல் நடந்தால் 100 ரூபாய், வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம்..!
சென்னையில் மாஸ்க் அணியாமல் நடந்தால் 100 ரூபாய், வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம்..!
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1987 பிரிவு 2-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் வெளியே வரும்போது, கொரானா வைரஸ் நோய் தொற்று சமூகப் பரவலைத் தவிர்ப்பதற்க...
