வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்!
வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்!
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெ...
