சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Tag: நியாயமாக நடக்காத நீட் தேர்வு

நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரானாவின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரானாவால் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை. இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம். முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில அரசும், இந்தத் தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்...