அயோத்திக்கு பக்தர்கள் வர வேண்டாம் – அறக்கட்டளை அறிவிப்பு
ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டும் பூமி பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் - அறக்கட்டளை அறிவிப்பு
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை நடைபெறும் நிகழ்ச்சியை நேரில் காண பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது.
தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில்...
