மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் தோல்வி – மன்மோகன் சிங்
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய அரசாங்கத்தினால் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட தோல்வியை சந்தித்து உள்ளது. இது விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் ஆகும்.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு ரத்து நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும். பணமதிப்பு ரத்து நடவடிக்கையும், தவறான ஜிஎஸ்டி அமலாக்கமும் மக்களை வதைத்து விட்டன.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லை. ஆண்டுக்கு 17, 600 வேலைவாய்ப்புகள் தான் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
மத்தியப்...
