ஆன்லைன் மூலம் ஆவணங்கள் தமிழக பதிவுத்துறை அடுத்த அதிரடி!
தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கி வைத்தார். அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாகவும் விரைவாகவும் பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம்.
அதற்கு ஏற்றபடி மென்பொருளில், ‘பொதுமக்களே ஆன்லைன் வழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழிமுறை’ என்ற வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
“https://tnreginet.gov.in” என்ற இணையதளத்தில் முதலில் பொதுமக்கள் என்ற வகைப்பாட்டில் புதிய உள்நுழைவை (லாக் இன்) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதற்குரிய பயனர் பெயர், கடவுச்சொல்லை (யூசர் நேம், பாஸ்வர்டு) உள்ளடு செய்து உள்நுழைவிற்குள் சென்று, பதிவு செய்தல், ஆவணப் பதிவு ஆவணத்தை உரு...
