பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்!
பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உள்ள ஒரு கடைக்கு 4 பெண்கள் சென்றனர். அப்போது அவர்கள் கடையில் பொருட்களை திருடியதாக பிடிக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு பலர் கூடினார்கள். அவர்கள் ஒரு இளம்பெண் உள்பட 4 பெண்களையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்களது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தினார்கள்.
அப்பெண்கள் தங்களது ஆடைகளை திரும்பத்தரும் படி அங்கிருந்த கும்பலிடம் கெஞ்சினார்கள். தங்களை விட்டு விடும்படி கதறி அழுதார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாத கும்பல் 4 பெண்களையும் சுமார் ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தின் 2 வீடியோக்கள் சமூகவலை தளங்களில் பரவி வருகிறது. அதில் 4 பெண்கள் கம்பால் தாக்கப்படுவதும், ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளும் இடம் பெற்ற...
