வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: பிரக்ஞானந்தா

சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது – பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்‌ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளி...
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்!

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார். முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது....