திருச்சி, கரூர், விழுப்புரம் உட்பட 6 மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை!
சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் போலீசாருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில் சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலையில் சிக்கியதால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட விழுப்புரம் எஸ்.பி. தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து திருச்சி அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உட்பட திருச்சி சரகத்தில் உள்ள பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட தடை விதித்து திருச்சி DIG ஆனி வி...
