மோசடிக்காரர்களை மக்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை அமேதி மக்கள் மோடிக்கு தக்க பதில் அளிப்பார்கள் – பிரியங்காகாந்தி
மோசடிக்காரர்களை மக்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை அமேதி மக்கள் மோடிக்கு தக்க பதில் அளிப்பார்கள் - பிரியங்காகாந்தி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார்.
உங்கள் (ராகுல் காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக இறந்து போன ஒரு தலைவரை பற்றி விமர்சனம் செய்தார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி இவ்வாறு பேசினார்.
இறந்துப்போன ஒரு தலைவரை அதிலும் மிக கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி இவ்வாறு பேசிய பிரதமர் மோடி பேசியது குறித...

