பிளஸ்1 பொதுத்தேர்வு நாளை தமிழகத்தில் 3,119 மையங்களில் தொடங்குகிறது!
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள்.
தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை (10 ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
10, 11, 12 ஆகிய மூன்று பொதுத்தேர்வையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள், சிறைக் க...
