சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: பி எம் கேர்ஸ் முறைகேடு

பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது. தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கைய...