திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் பல திரையரங்குகளில் அவருடைய பிறந்தநாளான இன்று 17-ஆம் தேதி வெளியாகி உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கண்ணீர் மல்க கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இவரின் பிறந்தநாளை ரசிகர்கள், திரைதுறையினர் என பலரும் புனித் ராஜ்குமாரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்....
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்!

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபின், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்....
புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்!

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவரின் நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்களை உலுக்கியது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (பிப்ரவரி 04) பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை வருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்....