வைரலாகும் அஜித்தின் பைக் பயண ரூட் மேப்!
நடிகர் அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.
ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது. ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், ஏகே61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பின்னர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலை, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
...
