ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

Tag: பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தனர். இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வ...