தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: பஸ் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்பியதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கருதி 2 நாள் பொது வேலைநிறுத்தம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.
அதனை ஏற்று நாடு முழுவதும் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடங்கியது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை, ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், 18 மாத அகவிலைப்படியினை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஐ.என்.டி. யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன.
தொழிலாளர்கள், ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்...

