தயாரிப்பாளர் மதியழகன் வில்லன் ஆக நடிக்கும் ‘பிதா’!
தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் 'பிதா'!
எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, 'சவரக்கத்தி' படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் 'பிதா' படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.
மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும...
