மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
மது வகைகள் கொரானாவை கட்டுப்படுத்தாது உடல் நலத்தை கெடுத்து உயிர்பலியை வாங்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் பேர் மதுபானங்களை குடிப்பதால் ஏற்படுகிற பாதிப்பு காரணமாக மரணம் அடைகின்றனர்.
இவை தவிர சமூகத்திலும் மது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களை தயக்கமே இன்றி செய்து சட்டத்தின் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டு தங்களது குடும்பத்தினர் வாழ்க்கையையும் அழிக்கிறார்கள்.
இந்த சூழலில் தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரசை ஒழிக்க மருத்துவ உலகம் போராடி வருகிறது.
அதே நேரம் உலக அளவில் பல நாடுகளிலும் மது குடித்தால், அது கொரானா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரானா வைரசை மது பானங்கள் கொன்று விடும் எ...
