குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI
மனீஷ் மிஸ்ரா என்ற துடிப்பாடன் இளைஞர் 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார்.
1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மனீஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு காவல் ஆய்வாளர். குனா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.மனீஸ் மிஸ்ரா தனது பணியில் சில என்கவுன்ட்டர் பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக 2005ஆம் ஆண்டில் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றினார்.
ஆனால் திடீர் என மனீஷ்மிஸ்ராவை கடந்த 15 ஆண்டுகளாக காணவில்லை.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்துப் பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும் விஜய் சிங் பதோரியாவும் குளிரில் ந...
