வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: மம்முட்டி

உடல்நிலை குறித்து நடிகர் மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உடல்நிலை குறித்து நடிகர் மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
உடல்நிலை குறித்து நடிகர் மம்முட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!

ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி! இந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, தளபதி பட பாணியில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....