பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!
சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர்.
பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது.
இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமி...
