மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..!
பிரதமர் மோடி வருகிற 11ந்தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி கூறும்பொழுது, நாட்டில் ‘சமூக நெருக்கடி’ போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க...
