ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: முக்கிய செய்திகள்

மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

HOME SLIDER, கட்டுரை
மொழி வழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட RSS – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன் ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுத் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 1956 ஆம் ஆண்டு வரை இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்படவில்லை. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதென மத்திய அரசின் முடிவிற்கு 1956 ஆம் ஆண்டு அதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானது. அதிலும் தமிழர் வாழும் நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டம், கொல்லங்கோடு வனப்பகுதி, கொல்லேகாலம் வட்டத்தின் தென்பகுதி வேங்கடமலையை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு இழந்தது. இவை...