தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் கொள்ளைக் கூட்டம் அர்த்தராத்திரியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தொடர்ந்தால், தமிழ் மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்!
“மக்களை – மாணவர் நலனை – தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க எள்ளளவும் முயற்சிக்காத எத்தர்கள் – சுயஅரிப்பைச் சொறிந்துகொள்ள ஒட்டுபவைதான் அநாமதேயச் சுவரொட்டிகள்; மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்” தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வெட்கித்தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப்...

