திரையுலக மூத்த செய்தியாளர் மேஜர்தாசன் மறைவுக்கு TMJA இரங்கல்!
திரையுலக மூத்த செய்தியாளர் மேஜர்தாசன் மறைவுக்கு TMJA இரங்கல்!
தமிழ் சினிமாவின் மூத்த செய்தியாளர், பி.ஆர்.ஓ. திரு.மேஜர்தாசன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார்.
இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளம் வைத்து பயணப்பட்டவர். மூத்த கலைஞர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அன்பாக பழகக்கூடியவரின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின், நண்பர்களின் துயரத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தன்னையும் இணைத்து கொள்கிறது.
ஆழ்ந்த இரங்கலுடன்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம்...
