மேலாடை இல்லாத அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த மகன்,மகள்… சர்ச்சையில் சிக்கிய அம்மா!
மேலாடை இல்லாத அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த மகன்,மகள்... சர்ச்சையில் சிக்கிய அம்மா!
சபரிமலை கோயிலுக்குள் போக முயன்று சர்ச்சையில் சிக்கிய பாத்திமா இப்போது ஆபாச சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். பாத்திமா ரெஹானா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.
இப்போது, புதியதாக மற்றோரு சர்ச்சையில் பாத்திமா சிக்கியுள்ளார். ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கி...
