வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!
வைகோ -அன்புமணி உட்பட 6 பேர் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு..!
பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியி...

