4ம் கட்ட ஊரடங்கு மே 31வரை நீடிப்பு
நாடு முழுவதும் கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் பெரும்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் இல்லை.
இதே போல நாடு முழுவதும் மே 31வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என்று மத்கிய அரசும் அறிவித்து உள்ளது....
