தமிழகத்தில் வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்திய மைக்ரோ திட்டத்தால் விரைவில் குறையும் கொரானா – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
தமிழகத்தில் வைரஸ் பரவுதலை தடுக்க செயல்படுத்திய மைக்ரோ திட்டத்தால் விரைவில் குறையும் கொரானா - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோவை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக தனி படுக்கை வசதிகள் உருவாக்கி இருப்பதோடு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அந்த வகையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் 1500 படுக்கைகள் ஒதுக்குகின்றனர். அதேபோல சவிதா மருத்துவ கல்லூரி, மியாட் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 500 படுக்கைகள் ஒதுக்க உள்ளனர்.
தற்போது பி.சி.ஆர். எனப்படும் கருவி மூலமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இந்த கருவி...
