நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!
நாளை முதல் எதற்கெல்லாம் ஊரடங்கு தளர்வு யாருக்கெல்லாம் பயன் லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!
கொரானா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை 20ம் தேதி முதல் ஊரடங்கு சில நிபந்தனைகளுடன் தளர்வு செய்யப்படுகிறது.
அதே போல 20-ந்தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து ச...
