கொரானா பிடியில் சிக்கிய ரஷ்ய பிரதமர்!
உலகம் முழுதும் பரவி வரும் கொரானா வைரஸ் ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கும் கொரானா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 54 வயது நிரம்பிய மிக்கைல் கடந்த ஜனவரி 16-ம் தேதி தான் ரஷியாவின் பிரதமராக பதவியேற்றார்.
வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து மிக்கைல் தன்னைத் தானே தனிமைபடுத்தி கொண்டார்.
கொரானா பரவிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் வைரசில் இருந்து விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மிக்கைல் குணமடையும் வ...
