வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: ரிசர்வ் வங்கி

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வ...
ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி!

ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஏ.டி.எம்.மில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி! வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்தவகையில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் (வெள்ளை லேபிள் ஏ.டி.எம்.) பணம் இல்லாமல் இருந்தால...
கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு – ஆர்.பி.ஐ அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பால் அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகளில் வாங்கிய கடனை கட்டுவதில் விலக்கு - ஆர்.பி.ஐ அறிவிப்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. மாத தொடக்கம் நெருங்கி வரும் சூழலில் வங்கி கடன் தவணைகள் மக்களை பெரிதும் அச்சப்படுத்தியது. அதோடு வங்கி கடன் தவணையில் ஏதாவது சலுகைகள் அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித...
பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்… மோடி அரசு நெருக்கடியா?

பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்… மோடி அரசு நெருக்கடியா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்... மோடி அரசு நெருக்கடியா? இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாத காலம் இருக்கின்ற நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சுயமாக இயங்கவிடுவதில்லை. அதன் முடிவுகளில் தலையிடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறியிருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளது மத்திய அரசு நெருக்கடியால்தானா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியில் இளம் வயதில் துணை கவர்னர் பொறுப்பை ஏற்றவ...
உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்...