கஜா புயலுக்கு முன்… ரெட் அலார்ட் எச்சரிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது!
கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!
வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள்.
வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள்.
வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
பாதி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும்.
உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்க...
