வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!
சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர்.
அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள்.
இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக:கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும். இதற்கு முன்பு ஆங்காங்கே ...
