பாம்பு கடித்து உயிர் பிழைத்த வாவா சுரேசுக்கு இலவச வீடு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ்.
வாவா சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர். வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து அவற்றை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டு வருவார்.
இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் இவரை பாம்பு பிடிக்க அழைப்பார்கள்.
கடந்த வாரம் கோட்டயம் பகுதியில் பாம்பு பிடிக்க சென்றார். அங்கு நல்ல பாம்பு ஒன்றை பிடித்து சாக்கில் அடைக்கும் போது அவரை பாம்பு கடித்து விட்டது.
இதில் வாவா சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலை தேறியது. நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த வாவா சுரேஷ் நிருபர்களிடம் கூறும்போது, இது எனக்கு மறு பிறவி.
இம்முறை சாவின் விளிம்புக்க...
